Nov
26

01.


நம்ம பச்சிளம் பாலகர் (பபா) வைத்தியரிடம் மருந்து வாங்க சென்றிருக்கிறார். அந்த உரையாடல்

வைத்தியர் - உங்களுக்கு மூளையில் ஒரு கட்டி வந்திருக்கிறது

பபா - ஹையா, சந்தோஷம் சந்தோஷம் (துள்ளிக்குதிக்கிறார்)

வைத்தியர் - நான் கவலையான விடயத்தை சொல்கிறேன், நீ ஏனடா துள்ளிக் குதிக்கிறாய்

பபா - ஹையா எனக்கு மூளை இருக்கு.. எங்க அம்மா சொல்லுவாங்க எனக்கு மூளை இல்லை என்று, இதை போய் முதலில் அவங்க கிட்ட சொல்லனும்...


02.


நம்ம பச்சிளம் பாலகர் பள்ளியில்


வாத்தியார் - 4 ஐயும் 5 ஐயும் கூட்டினால் எத்தனை வரும்?

பபா - 9 வரும்

வாத்தியார் - அப்ப 5 ஐயும் 4 ஐயும் கூட்டினால் எத்தினை வரும்?.

பபா - நீங்கள் தலைகீழாக மாற்றி கேட்டால் நாங்கள் முட்டாளாகிவிடுவோமா, இந்த கேள்விக்கு விடை 6

03.
நம்ம பச்சிளம் பாலகர் பாமசியில்

பபா - எனக்கு சில விட்டமின்கள் வேண்டும்

பாமசியிலுள்ளவர் - என்ன விட்டமின் A யா, B யா இல்லை C யா ?

பபா - நான் இன்னும் ஆங்கில எழுத்துக்கள் படிக்கவில்லை, அதனால் ஏதையாவது தாருங்கள்


பதிவிட்டது: யோ வொய்ஸ் (யோகா)

Nov
13





அனைத்துப் பச்சிளம் பாலகர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.


பச்சிளம் பாலகனாக வலையுலகில் தவழ்ந்துகொண்டிருந்த எனக்கு இன்று பச்சிளம் பாலகர் சங்கத்திலேயே தவழ வாய்ப்புக் கிடைத்துவிட்டது. பாலகனாகத் தவழ்ந்த காலத்தில் நான் செய்த வீரப் பிரதாபங்களில் ஒன்றையே இன்று அலசப்போகிறேன்.


இது சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். நான் தரம் ஒன்று படித்துக்கொண்டிருந்த காலம். சொல்வதெழுதல் என்றால் எனக்கோ சில்ரன்ஸ் பனடோல் சிறப் போல இனிப்பான ஒரு விடயம்தான். எல்லாம் சரியாக எழுதினாலும் செல்வழம் எனும் தலைப்பை மாத்திரம் சரியாகப் பிழையாக எழுதிவிடுவேன். இது இப்போதுகூட சொல்வழம் எழுதும்போது எனக்கு ஏற்படும் குழப்பம். இதனாலேயே எனக்கு ஸ்டார், Very good என்ற பாராட்டு, கௌரி ரீச்சரின் கைகுலுக்கு எதுவுமே கிடைக்காமல் போய்விடும்.


அன்று ஒருநாள், அதிஸ்டவசமாக சொல்வளத்தை சரியாக எழுதிவிட்டேன். அது சரியெனத் தெரிந்தவுடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. இன்று கைகுலுக்கல் நிச்சயம் என்று. ஆனால் என்ன கொடுமையோ தெரியவில்லை, கடைசிச்சொல்லை நான் சரியாக எழுதியுமே பிழை போட்டு அன்றும் எனக்கு அவ்வ்வ தான் கிடைத்தது.


இன்னுமே எனக்கு புரியவில்லை. எதற்காக எனக்குப் பிழை போடப்பட்டது என்று. உங்களுக்குப் புரிந்தால் பின்னூட்டுங்கள்.


அன்று டீச்சர் சொன்ன வார்த்தை = பேனா.

நான் எழுதியது = பெ.


பதிவிட்டது: Subankan

Nov
13

வணக்கம்

அனைத்து பச்சிளம் பாலகர்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.


அகில உலக பச்சிளம் பாலகர் சங்கத்தின் உத்தியோகபூர்வ வலைப்பதிவினூடாக சந்திப்பதில் மகிழ்ச்சி...
சர்வதேச குழந்தைகள் தினத்தில் குழந்தைகளான எங்கள் தளம் ஆரம்பித்து வைக்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி.

இது பச்சிளம் பாலகர் தவழும் வலை. பச்சிளம் பாலகர்களின் குறும்புகள், சேட்டைகள், சண்டைகள் நிகழும் களம். இங்கே எங்கள் குழந்தைப் பருவத்து நினைவுகளை முடிந்தவரை சுவாரசியமாக சொல்ல இருக்கிறோம்.
இந்த வலையின் மூலம் பச்சிளம் பாலகர்களான நாம்,
எங்கள் அனுபவங்களை எங்கள் மொழியிலேயே சொல்ல இருக்கிறோம்...
எங்கள் வயது நகைச்சுவைகளும் இடம்பெறும்.
எங்கள் வயதிற்குரிய ஆபாசங்களாகக் கருதப்படும் 6+ இடுகைகளை இடுவது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்...
இந்தத் தளத்தில் இடப்படும் பச்சிளம் பாலகர்களின் ஆக்கங்களைவந்து இரசிக்குமாறு எங்கள் சங்கம் சார்பாகவும் அழைக்கிறேன்....

மூத்தவர்களின் ஆசி எமக்குத் தேவை.
எனவே மூத்தவர்கள் பின்னூட்டம் மூலம் உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்...

நீங்களும் சங்கத்தில் இணைய விரும்பினால் பின்னூட்டம் மூலம் உங்கள் மின்னஞ்சலைத் தெரிவியுங்கள் அழைப்பு அனுப்பப்படும்,

உங்கள் அட்டகாசங்கள் தொடங்கட்டும்.

பதிவிட்டது: வந்தியத்தேவன்

நாங்கள் யார்?

பச்சிளம் பாலகர்களின்ர அனுபவங்களயும், குறும்புகளயும் பகிரப் போறம்... இது ISO முத்தரை குத்தப்பட்ட உண்மையான ப.பாலகர் சங்கத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம்...

விரல் சூப்பிகள்