வணக்கம்
அனைத்து பச்சிளம் பாலகர்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
அகில உலக பச்சிளம் பாலகர் சங்கத்தின் உத்தியோகபூர்வ வலைப்பதிவினூடாக சந்திப்பதில் மகிழ்ச்சி...
சர்வதேச குழந்தைகள் தினத்தில் குழந்தைகளான எங்கள் தளம் ஆரம்பித்து வைக்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி.
இது பச்சிளம் பாலகர் தவழும் வலை. பச்சிளம் பாலகர்களின் குறும்புகள், சேட்டைகள், சண்டைகள் நிகழும் களம். இங்கே எங்கள் குழந்தைப் பருவத்து நினைவுகளை முடிந்தவரை சுவாரசியமாக சொல்ல இருக்கிறோம்.

இந்த வலையின் மூலம் பச்சிளம் பாலகர்களான நாம்,
நீங்களும் சங்கத்தில் இணைய விரும்பினால் பின்னூட்டம் மூலம் உங்கள் மின்னஞ்சலைத் தெரிவியுங்கள் அழைப்பு அனுப்பப்படும்,
உங்கள் அட்டகாசங்கள் தொடங்கட்டும்.
எங்கள் அனுபவங்களை எங்கள் மொழியிலேயே சொல்ல இருக்கிறோம்...
எங்கள் வயது நகைச்சுவைகளும் இடம்பெறும்.
எங்கள் வயதிற்குரிய ஆபாசங்களாகக் கருதப்படும் 6+ இடுகைகளை இடுவது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்...
இந்தத் தளத்தில் இடப்படும் பச்சிளம் பாலகர்களின் ஆக்கங்களைவந்து இரசிக்குமாறு எங்கள் சங்கம் சார்பாகவும் அழைக்கிறேன்....
மூத்தவர்களின் ஆசி எமக்குத் தேவை.
எனவே மூத்தவர்கள் பின்னூட்டம் மூலம் உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்...
நீங்களும் சங்கத்தில் இணைய விரும்பினால் பின்னூட்டம் மூலம் உங்கள் மின்னஞ்சலைத் தெரிவியுங்கள் அழைப்பு அனுப்பப்படும்,
உங்கள் அட்டகாசங்கள் தொடங்கட்டும்.
பதிவிட்டது: வந்தியத்தேவன்
7 comments:
கோபி, என்னிடம் கேட்காமல் எப்படி சங்கத்தை தொடங்கலாம்.???????
//யோ வொய்ஸ் (யோகா) said...
கோபி, என்னிடம் கேட்காமல் எப்படி சங்கத்தை தொடங்கலாம்.??????? //
நான் தலைவர் என்ற ரீதியில் ஒட்டுமொத்த அதிகாரங்களும் என்னிடமுண்டு...
தவிரவும்,
தளத்திற்கான ஒட்டுமொத்த கருத்திட்டமும் சகோதரக் குழந்தை வந்தியினுடையது...
இச் சங்கத்தில் இருக்கும் முதியவர்களை நீக்கினால் மட்டுமே நான் இணைந்துகொள்வேன்.
இல்லையேல் நான் தனியாக பாபா மாற்றுக்கொள்கையாளர் சங்கம் ஒன்றை ஆரம்பிப்பேன்.
any way nice idea....
அனைவருக்கும் பச்சிளம் பாலகர்கள் தின நல்வாழ்த்துக்கள்
////Subankan said... November 13, 2009 9:04 PM
அனைவருக்கும் பச்சிளம் பாலகர்கள் தின நல்வாழ்த்துக்கள்/////
ரிப்பீட்டு
/*..இச் சங்கத்தில் இருக்கும் முதியவர்களை நீக்கினால் மட்டுமே நான் இணைந்துகொள்வேன்.
இல்லையேல் நான் தனியாக பாபா மாற்றுக்கொள்கையாளர் சங்கம் ஒன்றை ஆரம்பிப்பேன். ..*/
அங்கிள் மாற்று கொள்கை என்டா என்ன அங்கிள்..!
Post a Comment
உங்கள் கருத்தை பாலகர்களுக்கு புரியும் மழலை மொழியில் வழங்குங்கள்.