அனைத்துப் பச்சிளம் பாலகர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.


பச்சிளம் பாலகனாக வலையுலகில் தவழ்ந்துகொண்டிருந்த எனக்கு இன்று பச்சிளம் பாலகர் சங்கத்திலேயே தவழ வாய்ப்புக் கிடைத்துவிட்டது. பாலகனாகத் தவழ்ந்த காலத்தில் நான் செய்த வீரப் பிரதாபங்களில் ஒன்றையே இன்று அலசப்போகிறேன்.


இது சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். நான் தரம் ஒன்று படித்துக்கொண்டிருந்த காலம். சொல்வதெழுதல் என்றால் எனக்கோ சில்ரன்ஸ் பனடோல் சிறப் போல இனிப்பான ஒரு விடயம்தான். எல்லாம் சரியாக எழுதினாலும் செல்வழம் எனும் தலைப்பை மாத்திரம் சரியாகப் பிழையாக எழுதிவிடுவேன். இது இப்போதுகூட சொல்வழம் எழுதும்போது எனக்கு ஏற்படும் குழப்பம். இதனாலேயே எனக்கு ஸ்டார், Very good என்ற பாராட்டு, கௌரி ரீச்சரின் கைகுலுக்கு எதுவுமே கிடைக்காமல் போய்விடும்.


அன்று ஒருநாள், அதிஸ்டவசமாக சொல்வளத்தை சரியாக எழுதிவிட்டேன். அது சரியெனத் தெரிந்தவுடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. இன்று கைகுலுக்கல் நிச்சயம் என்று. ஆனால் என்ன கொடுமையோ தெரியவில்லை, கடைசிச்சொல்லை நான் சரியாக எழுதியுமே பிழை போட்டு அன்றும் எனக்கு அவ்வ்வ தான் கிடைத்தது.


இன்னுமே எனக்கு புரியவில்லை. எதற்காக எனக்குப் பிழை போடப்பட்டது என்று. உங்களுக்குப் புரிந்தால் பின்னூட்டுங்கள்.


அன்று டீச்சர் சொன்ன வார்த்தை = பேனா.

நான் எழுதியது = பெ.


பதிவிட்டது: Subankan

11 comments:

நீர் பச்சிளம் பாலகன் தான் சுபாங்கன்............
நீர் அவரே தான்....

பேனாக்கு பெ என்று எழுதிய சிங்கம் வாழ்க

//கனககோபி said...
நீர் பச்சிளம் பாலகன் தான் சுபாங்கன்............
நீர் அவரே தான்...//

ஒத்துக்கொண்டால் சரி

//கனககோபி said...
பேனாக்கு பெ என்று எழுதிய சிங்கம் வாழ்க//

ஏன்? பேனா, பேயன்னா, பையன்னா என்டுதானே சொல்லுவினம்?

நானும் வாறன்........நானும் வாறன்.........என்னையும் சேருங்கோ..........

//Balavasakan said...
நானும் வாறன்........நானும் வாறன்.........என்னையும் சேருங்கோ..........//

பொறுப்பாளர், சகோதரக் குழந்தை வந்தியிடம் உங்கள் கோரிக்கை முன்னகர்த்தப்படுகிறது....

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் பாலகர்களே.....

இது எல்லாம் பபா சங்கத்தில் நிலைத்திருப்பதட்காக சொல்லப்படும் பொய்கள் எவருமே நம்பவேண்டாம்

பாலவாசகன் எனக்கு ஈமெயில் பண்ணுங்கள் உங்கள் ஈமெயில் ஐடியை

ஐயோ டீச்சர் சுபாங்கன் என் பென்சிலை திருடிட்டான்

good

அச்சா, என்ட வயசு ஆக்களுக்கு என்று ஒரு வலையில்லை என்ற கவலை இன்டைக்கு முடிஞ்சு...

நான் பென்சில் கொண்டர மறந்திட்டன் டீச்சர் அடிப்பாவே...!! :(

Post a Comment

உங்கள் கருத்தை பாலகர்களுக்கு புரியும் மழலை மொழியில் வழங்குங்கள்.

நாங்கள் யார்?

பச்சிளம் பாலகர்களின்ர அனுபவங்களயும், குறும்புகளயும் பகிரப் போறம்... இது ISO முத்தரை குத்தப்பட்ட உண்மையான ப.பாலகர் சங்கத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம்...

விரல் சூப்பிகள்